Theme Check

கல்லில் மோதி கணவன் மரணம்.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!

கல்லில் மோதி கணவன் மரணம்.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!

கல்லில் மோதி கணவன் மரணம்.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!
X

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர், லோகநாதன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. மகேஸ்வரி, கோண மூலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் உதவி ஆய்வாளராகவும், கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி, சத்தியமங்கலம் கொடிவேரி சாலையில் சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் லோகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மைல் கல்லில் மோதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இதனிடையே, லோகநாதனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவருடைய பெற்றோர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மகேஸ்வரி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து லோகநாதனை கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் நடந்த 23-ம் தேதி மகேஸ்வரி வேலைக்குச் செல்லும் போது கணவரை அழைத்துச் சென்றுள்ளார். நிறுவனத்திற்குள் சென்றதும், மகேஸ்வரியின் கள்ளக்காதலன் கவுரிசங்கர், கிரில் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் விக்னேஸ்வரன், விஜய் ஆகியோர் மறைந்திருந்து லோகநாதனை கான்கிரீட் கல்லால் தாக்கியுள்ளார். இதில் அங்கேயே சுருண்டு விழுந்து லோகநாதன் உயிரிழந்தார்.
திருமணத்தை மீறிய உறவு - கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது!
உடனடியாக லோகநாதனின் உடலையும், அவர் சென்ற இருசக்கர வாகனத்தையும் வாட்டர் கம்பெனி வேனில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி சாலையில் சென்றுள்ளனர்.

சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வேனை நிறுத்திய கவுரிசங்கர், லோகநாதனின் உடலையும், இருசக்கர வாகனத்தை அங்கிருந்த மைல் கல் அருகே போட்டு விபத்து போல சித்தரித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து லோகநாதனை கொலை செய்த அவரது மனைவி மகேஸ்வரி, கவுரிசங்கர், கவுரிசங்கரின் தம்பி விஜய், மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story
Share it