Theme Check

கணவர் செல்போனில் அழைத்தும் எடுக்காத மனைவி.. வீட்டு ஓனர் கூறிய பகீர் தகவல் !!

கணவர் செல்போனில் அழைத்தும் எடுக்காத மனைவி.. வீட்டு ஓனர் கூறிய பகீர் தகவல் !!

கணவர் செல்போனில் அழைத்தும் எடுக்காத மனைவி.. வீட்டு ஓனர் கூறிய பகீர் தகவல் !!
X

திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் ஐயப்பன் (35) - தரண்யா (25)தம்பதி வசித்து வந்தனர். ஐயப்பன் பிராட்வேயில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். உறவினர்களான இருவருக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐயப்பன் வேலைக்குச் சென்ற நிலையில் தனது மனைவி தரண்யாவை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் பலமுறை அழைத்துள்ளார். எனினும் தரண்யா எடுத்து பேசவில்லை. இதனையடுத்து அவர் வீட்டு உரிமையாளர் ரஞ்சித்திற்கு போன் செய்து மனைவியை பார்க்குமாறு கூறியுள்ளளார்.

aavadi suicide

அவர் சென்று வீட்டில் பார்த்தபோது தரண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரண்யாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தரண்யா தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it