Theme Check

மனைவியை ஒன்றரை லட்சத்திற்கு விற்ற கணவர்.. திருமணம் செய்ய முயன்ற நான்கு பேர் கைது !

மனைவியை ஒன்றரை லட்சத்திற்கு விற்ற கணவர்.. திருமணம் செய்ய முயன்ற நான்கு பேர் கைது !

மனைவியை ஒன்றரை லட்சத்திற்கு விற்ற கணவர்.. திருமணம் செய்ய முயன்ற நான்கு பேர் கைது !
X

மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் சுப்ரியா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். எனினும் கணவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததும் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்துவைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருமணம் ஆனா சுப்ரியா கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவந்தன.

marriage

ஒரிசாவை பூர்விகமாக கொண்ட அந்த பெண்ணுக்கு ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவருடன் ஏற்கனவே திருமணம் முடிந்ததும், பின்னர் மத்திய பிரதேசத்தில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கணவனுடன் சண்டை போட்டதாக் ரூ.1.5 லட்சத்திற்கு அப்பெண்ணை விற்றுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணை வாங்கிய மனோஜ் அவரை கட்டாய திருமணம் செய்து சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று கணவன், மனைவியாக வாழ திட்டமிட்டது அம்பலமானது. பின்னர் விசாரணையின்போது, நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ரூ.1.5 லட்சம் கொடுத்தேன். அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது, என்று கூறியுள்ளார்.

marriage

தற்போது மனோஜை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ஹ்ருசிகேஷ் சேத்தி, கிரண் சேத்தி மற்றும் டானிஷி ஆகிய மூவரைக் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய முக்கிய நபரான அப்பெண்ணின் கணவனையும் கைது செய்ய திட்டமிட்டு தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it