ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன் கத்தியால் குத்திக் கொலை!!

ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன் கத்தியால் குத்திக் கொலை!!

ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன் கத்தியால் குத்திக் கொலை!!
X

திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன், மனைவியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்த கர்ணேஷ்வர் டுடு என்ற நபருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் அண்மையில் கோபால்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றனர்.

கண்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில், மனைவி புஷ்பாவின் உடை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் ஆன பின்னர் ஜீன்ஸ் அணிவது முறையல்ல என கணவர் கூறினார்.

ஆனால், கணவரின் பேச்சை கேட்க மறுத்து புஷ்பா தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்த நிலையில், கண்காட்சிக்கும் புஷ்பா ஜீன்ஸ் அணிந்து வந்தது கணவருக்கு பிடிக்கவில்லை.

Jeans pant

இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சண்டையாக வெடித்துள்ளது. இந்த சண்டை முற்றியதில் மனைவி புஷ்பா தனது கணவரை கத்தியால் குத்தினார். கத்தி குத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படுகாயம் காரணமாக அவர் தன்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த கர்ணேஷ்வரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஜம்தார காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it