Theme Check

மனைவியுடன் சாட் செய்த நண்பனை கத்தியால் குத்திய கணவன்!!

மனைவியுடன் சாட் செய்த நண்பனை கத்தியால் குத்திய கணவன்!!

மனைவியுடன் சாட் செய்த நண்பனை கத்தியால் குத்திய கணவன்!!
X

கொடைக்கானலில் கார்த்திக் (29) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த சத்தியநாதன்(28) என்பவர் மேலாளராக கடந்த ஒரு வருடமாக பணி புரிந்து வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வீட்டு வரை அழைத்து செல்லும் அளவிற்கு இருவரின் நட்பு தொடர்ந்தது. இந்நிலையில் சத்தியநாதனுக்கும், கார்த்திக் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இருவரும் தொலைபேசியில் அடிக்கடி உரையாடுவதும், குறுச்செய்திகள் அனுப்புவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கார்த்திக் இருவரையும் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாத இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

Kodaikanal murder

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் இருசக்கர வாகனத்தில் பின்சீட்டில் அமர்ந்து சத்தியநாதன் உடன் பெர்ன்ஹில்சாலை பகுதியில் சென்றுள்ளனர். அப்போது கார்த்திக் கத்தியை எடுத்து சத்தியநாதன் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் நிலை தடுமாறிய சத்தியநாதன் இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்து தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை கார்த்திக் விரட்டிச் சென்றார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை கைது செய்தனர்.

சத்தியநாதனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்தம்பம் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it