Theme Check

கள்ளக்காதலை கண்டித்த கணவன் விஷம் வைத்து கொலை!!

கள்ளக்காதலை கண்டித்த கணவன் விஷம் வைத்து கொலை!!

கள்ளக்காதலை கண்டித்த கணவன் விஷம் வைத்து கொலை!!
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு புகழரசி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சக்திவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் வழக்கம் போல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில் அவரது மனைவி வந்து பார்த்தபோது மர்மமான முறையில் சக்திவேல் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த கொளத்தூர் போலீசார் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இதனிடையே சக்திவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தம்பி முத்துசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

murder

புகாரின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு சக்திவேலின் மனைவி புகழரசி மீது சந்தேகம் எழுந்தது. அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுவிசாரணை நடத்தியதில் 29 வயதான முத்துக்குமார் என்ற இளைஞர் உடன் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

முத்துக்குமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது. புகழரசிக்கும், முத்துகுமாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு சக்திவேலுக்கு தெரியவந்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த புகழரசி சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை கொடுத்சக்திவேலுக்கு கொடுத்துள்ளார்.

இருந்த போதிலும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it