Theme Check

வங்கிக்குள் வைத்து மனைவியை வெட்டிய கணவன்..!

வங்கிக்குள் வைத்து மனைவியை வெட்டிய கணவன்..!

வங்கிக்குள் வைத்து மனைவியை வெட்டிய கணவன்..!
X

தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர், இன்று தேவாரம் கனரா வங்கியில் நகையை அடகு வைக்கச் சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற அவரது கணவர் வெள்ளைச்சாமி, வங்கிக்குள் வைத்து பிரேமலதாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த பிரேமலதாவை மீட்ட வங்கி ஊழியர்களும் அங்கிருந்தவர்களும், அவரை சிகிச்சைக்காக தேவாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேவாரம் காவல்துறையினர் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருவதுடன், தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆறு மாதங்களாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும், மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it