Theme Check

நான் ஆளும் கட்சி.. எங்கிட்டே ரசீதா..?: போலீசாரிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம்..!

நான் ஆளும் கட்சி.. எங்கிட்டே ரசீதா..?: போலீசாரிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம்..!

நான் ஆளும் கட்சி.. எங்கிட்டே ரசீதா..?: போலீசாரிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம்..!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாகை நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது.

நாகப்பட்டினம் நகராட்சியில் நாகூர் 7வது வார்டில் போட்டியிடும் நாகூர் நகர திமுக செயலாளர் செந்தில் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வேட்புமனு பரிசீலனைக்கு வந்தார்.
நான் ஆளும் கட்சின்னு தெரியாதா?' - காவல்துறையினரிடம் திமுக நகர செயலாளர்  வாக்குவாதம் | dmk cadre heat conversation with police | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil News ...
அப்போது, காவலர்கள் அவரை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி எனக் கூறினர். இதனால், நகர செயலாளர் செந்திலுக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது செந்தில், “நான் தான் வேட்பாளர்” என்று கூறினார். அதற்கான வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்குமாறு காவலர்கள் கூறினர்.

அதற்கு செந்தில், “நான் ஆளும் கட்சி என்று உங்களுக்கு தெரியாதா..? ரிசிப்ட் காமிச்சா தான் உள்ள அனுப்புவீர்களா?” என்று காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அங்கிருந்த காவலர்கள், ‘ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, வேட்பாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி; மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
நான் ஆளும் கட்சின்னு தெரியாதா?' - காவல்துறையினரிடம் திமுக நகர செயலாளர்  வாக்குவாதம் | dmk cadre heat conversation with police | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil News ...
வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பித்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படும்’ என்று கூறியதால் தொடர் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து திமுகவினர், செந்திலை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it