நான் மன்னிப்பு கேட்கிறேன்.. அதற்காக மைக்கை தூக்கி எறியவில்லை.. பார்த்திபன் விளக்கம் !!
நான் மன்னிப்பு கேட்கிறேன்.. அதற்காக மைக்கை தூக்கி எறியவில்லை.. பார்த்திபன் விளக்கம் !!

பார்த்திபன் இயக்கத்தில் உருவான `இரவின் நிழல்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு முதல் பாடலை வெளியிட்டார். அப்போது மேடையில் நடிகர் பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உரையாடும் நிகழ்வின்போது, மைக் சரியாக வேலைச் செய்யவில்லை என பார்த்திபன் வேகமாக மைக்கை முன்வரிசையில் தூக்கி வீசியெறிந்தார். இதனால் நிகழ்வில் சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து பார்த்திபன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்துவிட்டேன். இது நிச்சயம் அநாகரிகமான செயல். என்னை மன்னிக்கவும் என்று அவர் பேசினார். எனினும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்கருத்துகளையும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தூக்கிப் போட்டது மைக்தான். ஆனால் உடைந்தது என்னவோ எனது மனதுதான். வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை. கடந்த பல மாதங்களாக எனக்கு உறக்கம் இல்லை.

கடந்த மூன்று நாள்களாக சுத்தமாக உறக்கம் இல்லை. என்ன நடந்தது எனத் தெரியாமல் எனக்கு நிறைய டென்ஷன். மேடையில் நடந்த அந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடமும் ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன். அந்த சம்பவம் எனக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. சில தவறுகள் நடக்கும் போது அதை பின்னோக்கி சென்று சரி செய்ய முடியாது. ஒரு சிறு வயது பையன் மாதிரி நானே இறங்கி அனைத்து வேலையும் செய்யும்போது கோபம் எழுவது நியாயமானது. எனினும் அதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
newstm.in

