அப்படி நான் சொல்லவே இல்லை.. அந்தர் பல்டி அடித்தார் எடப்பாடி பழனிசாமி..!
அப்படி நான் சொல்லவே இல்லை.. அந்தர் பல்டி அடித்தார் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “கோவையில் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு செயல்கள் நடந்து வருகிறது.
நான்கு நாட்களாக ரவுடிகள் சுற்றித் திரிந்தது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர்கள் அல்லாத வெளியூர் அரசியல் கட்சி பிரமுகர்களை உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தைப் போல் தமிழக சட்டசபை முடக்கப்படும் என்று நான் சொல்லவேயில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியைத்தான் நான் குறிப்பிட்டேன்
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி 120 அடியில் இருந்து 150 அடி வரை உயர்த்தி, நீதிமன்ற உத்தரவின் படி அணையை பலப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.
கேரள அரசு அணையை பலப்படுத்த எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இந்த செயல் உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது. உள்ளாட்சித் தேர்தலில் மக்களை நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

