Theme Check

தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும்.. கேரள டாக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!

தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும்.. கேரள டாக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!

தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும்.. கேரள டாக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!
X

தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மறுத்தால், 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கேரள மருத்துவருக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவி என்ற மருத்துவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் பட்ட மேற்படிப்பு பயின்றேன்.

படிப்பை முடித்தவுடன், போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று அரசு நிர்ணயித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “மனுதாரர் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மறுத்தால், 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Next Story
Share it