தேசியக் கொடியால் உயிர் தப்பினேன்.. கர்நாடக மாணவர் கண்ணீர் பேட்டி..!
தேசியக் கொடியால் உயிர் தப்பினேன்.. கர்நாடக மாணவர் கண்ணீர் பேட்டி..!

உக்ரைனில் சிக்கி இருந்த கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரைச் சேர்ந்த முகமது ஹபீப் அலி என்பவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பி இருந்தார்.
இந்நிலையில், தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “நான், உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தேன்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்ததும், மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உள்பட பல மாணவர்கள் தங்கி இருந்தோம்.
அப்போது, அந்த விடுதியில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டு இருந்தேன். இதற்கு அனுமதி அளித்திருந்தனர். இந்திய தேசியக் கொடியால்தான் நான் உயிர் பிழைத்தேன்.
ஏனெனில், இந்திய தேசியக் கொடியை பார்த்ததும் உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை. உரிய பாதுகாப்பு கொடுத்தனர்.
தேசியக் கொடியை பயன்படுத்த இந்தியாவைத் தவிர மற்ற நாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், மற்ற நாட்டு மாணவர்கள் உக்ரைனில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கி இருக்கும் என்னைப் போன்ற பிற மாணவர்களும் பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.

