6 மாசமா கண்ணாடியில் முகம் பார்க்கவே பயந்தேன்.. அஜித் ஹீரோயின் கூறிய அதிர்ச்சி காரணம்... !!
6 மாசமா கண்ணாடியில் முகம் பார்க்கவே பயந்தேன்.. அஜித் ஹீரோயின் கூறிய அதிர்ச்சி காரணம்... !!

பாலிவுட்டில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகை வித்யா பாலன். தற்போது பாலிவுட்டில் இருக்கும் நடிகைகள் ஒல்லி உடல்வாகில் இருந்து கவர்ச்சிகளை தாராளமாக்குவர். ஆனால், பூசினாற் போன்று இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை வித்யா பாலன் தான். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்-க்கு மனைவியாக நடித்திருந்தார்.

இவருக்கு பாலிவுட்டில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்து வித்யா பாலனுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அவரின் உருவத்தை வைத்து கேலி செய்திருக்கிறார்கள். எனினும் அதனையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு தற்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.
இந்த நிலையில், திரையுலகில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் நடிகை வித்யா பாலன். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வித்யா பாலன் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னை 13 படங்களில் இருந்து தூக்கியிருக்கிறார்கள்.

அதில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். நான் மிகவும் அசிங்கமாக இருப்பது போன்று உணர வைத்தார். அதனால் 6 மாதங்களாக கண்ணாடியில் என்னை பார்க்க பயந்தேன். என்னை முன்பு வேண்டாம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் தற்போது போன் செய்து வாய்ப்பு அளித்தார்கள். நான் முடியாது என்று கூறிவிட்டேன். கே. பாலசந்தரின் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால் என்னிடம் கூறாமலேயே என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள், என்றார்.
newstm.in

