Theme Check

“மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்” : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

“மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்” : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

“மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்” : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!
X

நடிகர் நாசர் நடிப்புலகை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், தனது மூச்சு இருக்கும் வரை நடிப்பேன் என்று அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தென்னிந்தியாவின் முக்கிய நடிகரான நாசர் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. உடல்நல பிரச்னைகளால் அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

nazar

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல, புனைவு. நான் நடித்துக் கொண்டிருக்கிறேன், நடிப்பேன்.

எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று நாசர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it