உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் - சொன்னதை செய்து காட்டிய காதலி..!!
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் - சொன்னதை செய்து காட்டிய காதலி..!!

கர்நாடக மாநிம் தும்கூரு அடுத்த மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்த தனுஷ், பெங்களூருவில் துணி கடை வைத்துள்ளார். இவரும் ஆரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுஷ்மாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் இல்லை.
இந்த நிலையில், மஸ்க்கள் கிராமத்தில் நடந்த ஊர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனுஷ் கடந்த 11-ம் தேதி பெங்களூருவில் இருந்து தனது காரில் வந்து கொண்டிருந்தார். தும்கூரு தேசிய நெடுஞ்சாலை நிலமங்களா அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மீது தனுஷ் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து, சாலை விபத்தில் மரணமடைந்த தனுஷை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். காதலன் இறந்த சோகத்தில் இருந்த சுஷ்மா, கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், காதலன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், தான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுமாறு எழுதி வைத்துள்ளார்.
அவர் கடிதத்தில் எழுதியபடியே உறவினர்கள் மஸ்கல் கிராமத்தில் தனுஷை அடக்கம் செய்த இடத்தின் அருகே சுஷ்மாவை அடக்கம் செய்தனர்.

