நானும் பிள்ளை பெத்துப்பேன்... சவால் விட்ட டி.இமானின் முன்னாள் மனைவி?

நானும் பிள்ளை பெத்துப்பேன்... சவால் விட்ட டி.இமானின் முன்னாள் மனைவி?

நானும் பிள்ளை பெத்துப்பேன்... சவால் விட்ட டி.இமானின் முன்னாள் மனைவி?
X

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கடந்த நவம்பர் மாதம் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் ஒரு விதவை அல்லது விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியிருந்தார்.

அவர் சொன்னப்படியே விவாகரத்தான நான்கு மாதங்களில் விதவை பெண்ணான எமலி உபால்டை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து கூறினர். ரசிகர்களும் வாழ்த்தினர். ஆனால், முன்னாள் மனைவியான மோனிகா, அதற்குள்ளேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டாயே, 12 ஆண்டுகளாக உனக்காகவே வாழ்ந்தது என்னுடைய முட்டாள்தனம் என்று கூறி சாடியிருந்தார்.

d iman

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் இமானின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் இமான் விதவை பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்ததை குறிப்பிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், அவரது முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டு இமானுக்கு சவால் விட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தானும் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன் என்றும் தேவைப்பட்டால் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்றும் மோனிகா கூறியதாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

d iman

உண்மையிலேயே மோனிகா ரிச்சர்டு, இமானிடம் இப்படி சவால் விட்டாரா என்பது தெரியவில்லை. எனினும் பயில்வான் ரங்கநாதன் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமான் இரண்டாவது திருமணம் செய்துள்ள எமலியின் தந்தையான மறைந்த ஆர்ட் டைரக்டர் உபால்ட் பயில்வான் ரங்கநாதனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகைகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதும், இந்த பஞ்சாயத்து கமிஷ்னர் அலுவலகம் வரை சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

d

newstm.in

Tags:
Next Story
Share it