திரையுலகை விட்டே போறேன்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்..!
திரையுலகை விட்டே போறேன்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்..!

கடந்த 2017-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா.
இதில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராகுல். அதன் பிறகு ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் ராகுல் ராமகிருஷ்ணா நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையில் இருந்து விலகுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கமென்ட் அடித்ததை பார்த்த ராகுல் ராமகிருஷ்ணன் மீண்டும் ட்விட்டரில் கூறியதாவது; முட்டாள்களே, அது ஒரு ஜோக்.
அதிக சம்பளம், சொகுசான வாழ்க்கை அளிக்கும் வேலையை நான் ஏன் தூக்கி வீசப் போகிறேன்..? என்று கேட்டிருக்கிறார். ராகுலின் ட்வீட்டை பார்த்தவர்கள் கடுப்பாகி அவரை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

