Theme Check

“விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்” – சசிகலா அதிரடி!!

“விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்” – சசிகலா அதிரடி!!

“விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்” – சசிகலா அதிரடி!!
X

மார்ச் மாதம் 21 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி அன்று, வி.கே. சசிகலா தனது முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கி, திருச்சியில் முடித்தார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதி தனது, 2 ஆம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கினார்.

சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் முதலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார். அன்றைய தினமே, சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sasikala

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நூற்றுக் கணக்கான கேள்விகளை கேடடு விசாரணை மேற்கொண்டனர். அவரை கோடநாடு பங்களாவிற்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டிடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார். பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it