Theme Check

தமிழகம் மெச்ச ஆந்திராவில் பணியாற்றுவேன்.. அமைச்சர் ரோஜா பேட்டி..!

தமிழகம் மெச்ச ஆந்திராவில் பணியாற்றுவேன்.. அமைச்சர் ரோஜா பேட்டி..!

தமிழகம் மெச்ச ஆந்திராவில் பணியாற்றுவேன்.. அமைச்சர் ரோஜா பேட்டி..!
X

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரோஜா, ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில், ஆந்திராவில் பணியாற்றுவேன்” - அமைச்சர்  ரோஜா பேட்டி | Actress and Minister Roja speech in kanchipuram |  Puthiyathalaimurai - Tamil News ...
கோவிலில் அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றிய பின் வெளியே வந்த ரோஜாவுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, “தாய் வீடான ஆந்திராவில் என்னை, சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக நியமித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாமியார் வீடான தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என வேண்டிக் கொண்டனர். எனக்காக யார் யார் வேண்டிக்கொண்டார்களோ, ஆசி வழங்கினார்களோ, அவர்களுக்கெல்லாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில், தாய்வீடான ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

Next Story
Share it