Theme Check

ஐகோர்ட் அறிவுறுத்தல்.. ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது காவல்துறை..!

ஐகோர்ட் அறிவுறுத்தல்.. ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது காவல்துறை..!

ஐகோர்ட் அறிவுறுத்தல்.. ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது காவல்துறை..!
X

காவல்துறையில் ‘ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தக் காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளை பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆரம்பத்தில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுநராக இருப்பது, உதவியாளராக இருப்பது மட்டும்தான் ஆர்டர்லி வேலையாக இருந்துள்ளது. காலப்போக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டு வேலைகளை செய்யும் ஆட்களாக ஆர்டர்லிகள் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

காவலர் பயிற்சியை முடித்துவிட்டு, 45,000 ரூபாய் சம்பளம் வாங்கும் காவலரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டு வேலைக்கு பயன்படுத்துவது குற்றம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. மேலும், 150 போலீசார் இன்னும் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it