Theme Check

ஐபிஎல் ஏலம்.. எந்த வீரர் எத்தனை கோடி தெரியுமா..?

ஐபிஎல் ஏலம்.. எந்த வீரர் எத்தனை கோடி தெரியுமா..?

ஐபிஎல் ஏலம்.. எந்த வீரர் எத்தனை கோடி தெரியுமா..?
X

15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம்.

இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) நடைபெறுகிறது.
IPL Auction 2022 Team Players List Live: IPL Auction 2022 Live Streaming on  Hotstar, Star Sports, Jio TV App, IPL 2022 New Team Players List, Name,  Full Squad, Price Live Updates
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில், 229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர்.

வெளிநாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா-47, வெஸ்ட் இண்டீஸ்-34, தென்ஆப்பிரிக்கா-33, இங்கிலாந்து-24, நியூசிலாந்து-24, இலங்கை-23 வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

வீரர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் அஸ்வின், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், அம்பத்தி ராயுடு, தேவ்தத் படிக்கல், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், தென்னாப்பிரிக்காவின் ரபாடா, குயின்டன் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்தின் ஜாசன் ராய் உட்பட 48 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும்.

இந்த தொகையில் இருந்து இவர்களது ஏலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

* இந்திய வீரர் ஷிகர் தவானை ரூ.8.25 கோடி பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.12.25 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் முகமது சமியை ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட்-ஐ ரூ. 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ ப்ளெசிஸ்-ஐ ரூ.7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

Tags:
Next Story
Share it