Theme Check

ஐ.எஸ்.எல் கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம்வென்றது ஐதராபாத் !

ஐ.எஸ்.எல் கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம்வென்றது ஐதராபாத் !

ஐ.எஸ்.எல் கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம்வென்றது ஐதராபாத் !
X

ஐஎஸ்எல் என அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்கள் உற்சாம் அடைந்தனர். இந்த நிலையில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து, இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஐதராபாத் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

நேற்றிரவு இறுதிப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை. 2ஆவது பாதியில் கேரள வீரர் ராகுல் 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
isl
இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆ,ட்டம் சமனில் முடிந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியுடன் சேர்ந்து நான்கு முறை கேரளா இறுதிப்போட்டிக்கு சென்றப்போதும் சாம்பியன் கோப்பையை தவறவிட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it