Theme Check

ஐ.டி. வேலையில் இருந்து நீக்கியதால் 24ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் !!

ஐ.டி. வேலையில் இருந்து நீக்கியதால் 24ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் !!

ஐ.டி. வேலையில் இருந்து நீக்கியதால் 24ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் !!
X

ஐடி நிறுவனத்தில் வேலையை விட்டு நிறுத்தியதால் மனவுலைச்சலில் இருந்த பெண் 24ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை சிறுசேரி சிப்காட் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 35 வயதான ஜெனிபர் என்ற தாயுடன் வசித்து வந்துள்ளார். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இப்பெண் அதிக ஊதியம் பெற்றுக்கொண்டு வந்தார். இந்த நிலையில், நேற்று தான் வசித்த 33 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் 24ஆவது மாடியிலிருந்து ஜெனிபர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

suicide building

தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெனிபர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெனிபர் அம்மாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெனிபர்க்கு 35 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்தது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது. அதனால் தினந்தோறும் இரவு ஜெனிபர் உறக்கம் இல்லாமல் தவித்து வந்ததால் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர் பணிபுரிந்த ஐடி நிறுவனத்தில் இருந்து ஜெனிபரை நிறுவனம் திடீரென வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. வேலையை விட்டு நிறுத்தியதால் கடந்த மூன்று நாட்களாக அதிக மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

suicide building

மேலும் இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it