Theme Check

சிலை வழிபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சிலை வழிபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சிலை வழிபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
X

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது வள்ளலார் சத்தியஞான சபையில் கொள்கைக்கு மாறாக, சிவலிங்கம் உள்ளிட்ட தெய்வங்களை வைத்து சிலர் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர்குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை கடந்த 2006ஆம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

அதில் வள்ளலார் கடந்த 1872ஆம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி, உருவ வழிபாடு கூடாது. சத்தியஞான சபையில் ஜோதி தீபம் மட்டுமே காட்டப்பட வேண்டும். அப்போது மக்கள் அமைதியாக நின்று அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்ற தாரக மந்திரத்தை ஓதவேண்டும்.

vadalur

வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என வள்ளலார் கூறியுள்ளார். சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படியே இந்த சபை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அறநிலையத் துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும், சத்தியஞான சபையில் முறைகேடுகள் நடப்பதாக அறநிலையத் துறையில் குறிஞ்சிப்பாடி ஜி.சுப்பிரமணியன் என்பவர் அளித்த மனுவை எதிர்த்தும் சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

hc 1

அந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு கடந்த 2010ஆம் ஆண்டு விசாரித்து, ‘‘வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது, இதுதொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்’’ என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் டி.ராஜா, டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

newstm.in

Next Story
Share it