Theme Check

இனி இந்த மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்..!!

இனி இந்த மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்..!!

இனி இந்த மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்..!!
X

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேர், செங்கல்பட்டில் 266 பேர், திருவள்ளூரில் 71 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

mask

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

malls

மேலும், பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் கிருமிநாசினி வைக்காமல் உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it