Theme Check

கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் – பரபரப்பு! VIDEO

கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் – பரபரப்பு! VIDEO

கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் – பரபரப்பு! VIDEO
X

நகராட்சி வார்டுகளில் .தி.மு.., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் கட்சி மாறினால் அவர்களை வீடுபுகுந்து வெட்டுவேன் அதிமுக நிர்வாகி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அண்ணாநகரில் நடந்த நகராட்சி தேர்தலுக்கான .தி.மு.., ஆலோசனைக் கூட்டத்தில் .தி.மு.., ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மிரட்டலாக பேசினார்.

அதில், அ.தி.மு.., கரை வேட்டி கட்டி இருக்கும் வரை தான் நமக்கு மரியாதை. .தி.மு..,விற்கு துரோகம் நினைத்தால் அவர்கள் நன்றாக வாழமாட்டார்கள் என்று கூறினார்.

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று பதவி சுகத்தை அனுபவித்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் மீண்டும் கட்சிக்கு திரும்பி வந்து விட்டனர்.

admk

நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடும் .தி.மு..,வினர் வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி சென்றால், வீடு புகுந்து அவர்களை வெட்டுவேன்.ஏற்கனவே என் மீது வழக்குகள் உள்ளன. இன்னொரு வழக்கை சந்திக்கவும் தயாராக உள்ளேன், என்றார்.

அவர் இப்படி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it