Theme Check

இனிமேல் அந்த குற்றத்தை செய்தால் ஆண்மை நீக்கம்..!! விரைவில் அதிரடி சட்டம்!

இனிமேல் அந்த குற்றத்தை செய்தால் ஆண்மை நீக்கம்..!! விரைவில் அதிரடி சட்டம்!

இனிமேல் அந்த குற்றத்தை செய்தால் ஆண்மை நீக்கம்..!! விரைவில் அதிரடி சட்டம்!
X

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தாய்லாந்து நாட்டில் அதிகரித்து வருகின்றன. அரசு அதிரடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்த போதிலும் தண்டனை காலம் முடிந்த பின்னர் மீண்டும் அதே குற்றத்தை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்ட தாய்லாந்து அரசு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்தது.

Minor-girl-raped

அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பல்வேறு பரிசீலனைகளுக்கு பிறகே இந்த முடிவை தாய்லாந்து அரசு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரசாயன முறையில் ஆண்மை நீக்குவது குறித்து 2 மருத்துவர்களின் ஒப்புதல்கள் பெறப்படும். மேலும் குற்றவாளி 10 ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்படுவார்” என்று கூறியுள்ளது. இது தொடர்பாக சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை 145 செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Thai

இந்த சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்கு பின்னர், அந்நாட்டு அரச குடும்பத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தாய்லாந்தில் பாலியல் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தெரியாமல் தவறு செய்தவர்கள் வாழ்நாளில் மீண்டும் திருந்தி வாழ இந்த சட்டம் வழிவகை செய்யாது என்று சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு இந்த சட்டத்தை நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்று பொது மக்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்பதை தாய்லாந்து அரசு நிரூபிக்க முயற்சி செய்து வருவதால் பலர் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it