இதை செய்தால் வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!!
இதை செய்தால் வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!!

ரேஷன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழ்நாட்டில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. இதன் மூலம் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு பெற முடியும்.

தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 'www.tnpds.gov.in 'என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டை அலுவலகத்தில் பெறுவதில் சிக்கல் இருந்து வருவதாக பலர் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அச்சிடப்பட்ட புதிய ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்யப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதிய ரேஷன் கார்டை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் போதே அஞ்சலில் அனுப்பும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அஞ்சல் மூலம் புதிய ரேஷன் கார்டு உங்கள் வீடு தேடி வரும். அஞ்சலில் ரேஷன் கார்டை பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக, 25 ரூபாயை இணையதளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு, 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

