சின்னம்மா இல்லேன்னா உங்களுக்கு.. மதுரையில் பரபரப்பு பேனர்..!
சின்னம்மா இல்லேன்னா உங்களுக்கு.. மதுரையில் பரபரப்பு பேனர்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தங்கள் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.
நாள்தோறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது ஒற்றைத்தலைமை மோதலை அதிகரித்துள்ளது.
அதிமுகவின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் அதிமுக முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெ.ஆர்.சுரேஷ், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-சை எதிர்த்தும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேனர் ஒன்றை வைத்துள்ளார்.

அதில், “தமிழக தேர்தல்களில் அதிமுக அழிய காரணமானவர்களே..! சின்னம்மா இல்லேன்னா உங்களுக்கு பதவி? பாராட்டா? அதிமுகவை அழித்தது போதும். உங்களுக்கு டாடா. வாருங்கள் சின்னம்மா காப்பாற்றுங்கள் அதிமுகவை” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

