இனி ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் வீட்டுக்கே சரக்கு வரும் !!
இனி ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் வீட்டுக்கே சரக்கு வரும் !!

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி கூடிய விரைவில் வேகமாக ஆர்டர்களை டெலிவரி செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது ஆன்லைனில் மதுபான பாட்டில்களும் ஆர்டர் செய்யமுடியும். ஐதராபாத்தை தளமாக கொண்ட பூஸி (Booozie) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக கொல்கத்தாவில் 10 நிமிடங்களில் மது டோர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் மதுபான விநியோக செய்யும் சில நிறுவனங்கள் முன்னதாகவே இருந்தாலும், இதுவரை 10 நிமிட சேவை என்று எதுவும் இல்லை என Booozie குறிப்பிட்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநில கலால் துறையின் ஒப்புதலுடன் ஆன்லைனில் மதுவிற்பனை தொடங்கியுள்ளது. பூஸி என்ற நிறுவனம் புதுமையான AI-ஐப் பயன்படுத்தி நுகர்வோர்களின் நடத்தை மற்றும் ஒழுங்குமுறைகளை கணித்து அருகிலுள்ள கடையிலிருந்து மதுபானங்களை எடுத்து சென்று ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும்.
அதேபோல் இன்னோவென்ட் டெக்னாலஜிஸ், B2B லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை தளத்தை உருவாக்கி இருக்கிறது. இது டெலிவரி செலவுகளை கணிசமாக்கி Booozie-ஐ மலிவான தளமாக மாற்றுகிறது.

நுகர்வோர்களின் தேவை மற்றும் சந்தையில் தற்போது இருக்கும் விநியோகத்துக்கான பற்றாக்குறையை எளிதாக்க, விநியோகஸ்தற்களுக்கான கதவுகளை திறக்க முடிவு செய்திருக்கும் மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வயதுவரம்புக்கு உட்பட்டு மது விநியோகம், கலப்படம், அதிகப்படியான நுகர்வு போன்ற அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் பூஸி நிறுவனம் கூறியுள்ளது.
newstm.in

