இளையராஜா ஒன்றிணைப்பார்.. பாஜக சார்பில் போஸ்டர்..!
இளையராஜா ஒன்றிணைப்பார்.. பாஜக சார்பில் போஸ்டர்..!

புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் வெளியிட்டிருந்த ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அதில், “மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவரும் இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அரசியல், சினிமா வட்டாரங்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர், இளையராஜா, பிரதமர் மோடி ஆகிய மூவரின் புகைப்படங்களையும் இணைத்து, “இளையராஜா நம்மை ஒன்றிணைப்பார்" என, மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Next Story

