வெடித்து சிதறிய சட்ட விரோத ஆலை.. 100 பேர் பலி !!
வெடித்து சிதறிய சட்ட விரோத ஆலை.. 100 பேர் பலி !!

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த நேற்று இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.
இதனால் அங்கு ரசாயன பொருட்களும், குழாய்களும் வெடித்து சிதறின. அங்கு ஏராளமானோர் பணியில் இருந்தபோது இந்த கோர விபத்து நேரிட்டது.
இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார்.
தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்
Newstm.in