Theme Check

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
X

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் 5-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 9-ம் தேதியும் தொடங்குகிறது.

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதலில் 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு வருகிற ஏப்ரல் 25-ம் தேதி முதல் முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மே 4-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
Next Story
Share it