ஒரே நொடியில் திருமண சந்தோஷம் துக்கமாக மாறியது..!!
ஒரே நொடியில் திருமண சந்தோஷம் துக்கமாக மாறியது..!!

ஆல்வர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு திருமண வீட்டை சோகம் சூழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்த இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலானதோடு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
55 வயதான நீலம் என்ற பெண்மணி தனது மகனின் திருமண ஊர்வலத்தில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கியிருக்கிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் நீலம் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே நீலம் இதயம் தொடர்பான நோய்க்கு மருந்துகளை உட்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திருமண கொண்டாட்டத்தில் இருந்து வந்த குடும்பத்தினர் இரங்கல் கூட்டம் நடத்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஒரே நொடியில் திருமண சந்தோஷம் துக்கமாக மாறியது
Tags:
Next Story

