அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் படத்தை கிழித்துவிட்டு பிரதமர் படம்!!
அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் படத்தை கிழித்துவிட்டு பிரதமர் படம்!!

டெல்லி அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் மேடையில் போலீஸார் வலுக்கட்டாயமாக மோடியின் பேனரை கட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக விழா மேடையை அமைக்கும் பணியில் தொழிலாளர்களும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களும் ஈடுபட்டனர்.
மாநில அரசால் நடத்தப்படும் விழா என்பதால் அங்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புகைப்படங்களே இருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸார்,விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் இல்லாததை கண்டனர்.
பின்னர், விழா மேடைக்கு மோடியின் பேனர்களை எடுத்து வந்த போலீஸார் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, வலுக்கட்டாயமாக மோடியின் பேனர்களை விழா மேடையில் கட்டினர். மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் புகைப்படம் போலீஸாரால் கிழிக்கப்பட்டது.
இதனால் அங்கு ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியினர் மோடியின் புகைப்படத்தை அகற்றலாம் என்பதால் போலீஸார் அங்கேயே காவல் இருந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி போலீஸின் இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார்.டெல்லி காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in