Theme Check

வருமானவரி வழக்கு – எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி!!

வருமானவரி வழக்கு – எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி!!

வருமானவரி வழக்கு – எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி!!
X

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா மீது கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே. சூர்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரிக்கணக்குக்கான மறுமதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே. சூர்யா சார்பில் வாதிடப்பட்டது.

sj surya

ஆனால், முறையான சோதனைக்கு பிறகே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அவரது மனுக்களை தள்ளுபடி செய்தார்.

newstm.in

Next Story
Share it