Theme Check

1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்த வெப்பநிலை..!!

1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்த வெப்பநிலை..!!

1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்த வெப்பநிலை..!!
X

இந்தியா இந்த ஆண்டு வரலாறு காணாத வெயிலை கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் மே 15 வரையிலான பங்குனி, சித்திரை மாதங்கள் இந்தியாவின் வெயில் காலமாக அறியப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மார்ச் மாத வெப்பத்தை கணக்கிடுகையில் இதுவரை பதிவு செய்யப் பட்டதிலேயே அதிகமான வெயில் இந்த ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது.

சராசரி வெயில் பதிவு 33.10 டிகிரி செல்சியஸாக (இயல்பை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகம்) இருந்துள்ளது. குறைந்தபட்ச சராசரி வெயில் பதிவு 20.24 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது.

இங்கு குறிப்பிட்டுள்ள இந்த குறைந்தபட்ச சராசரி வெயிலே மூன்றாவது அதிகபட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 1901ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான சராசரி வெப்பநிலையில் இது இரண்டாவது அதிகபட்சமாகும். 1981 முதல் 2010 வரை கணக்கிடப்பட்ட வெயில் பதிவின் இயல்பை காட்டிலும் அதிகமாக அதாவது, 31.24 டிகிரி செல்சியஸ், 18.87 டிகிரி செல்சியஸ், 25.06 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த தகவல் இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக இரண்டு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் வடமேற்கு பகுதியில் இயல்பை விட 3.91 டிகிரி செல்சியஸ் வெயிஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இதுவே அதன் அதிகபட்சமாகும். நாட்டின் மத்திய பகுதியில் இயல்பை விட 1.62 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது. இது இரண்டாவது அதிகபட்சமாகும். தென் தீபகற்ப பகுதியில் நான்காவது அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. இயல்பை விட 0.59 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

df

இதற்கிடையே, கடந்த மாதம் 8.9 மிமீ மழை மட்டுமே பதிவானது. 1901ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது மிக குறைந்த அளவில் பதிவான மழை இதுவாகும். கடந்த 50 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையை காட்டிலும் 71 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது. கடந்த 1909ஆம் ஆண்டு, 7.2 மிமீ மழையும் 1908 ஆம் ஆண்டு 8.7 மிமீ மழையும் பெய்திருந்தது.

Next Story
Share it