Theme Check

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.. மீனவர்கள் அறிவிப்பு..!

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.. மீனவர்கள் அறிவிப்பு..!

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.. மீனவர்கள் அறிவிப்பு..!
X

தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களில் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல், தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் அத்துமீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it