உக்ரைன் தூதரகத்தை இடம் மாற்றிய இந்தியா!!
உக்ரைன் தூதரகத்தை இடம் மாற்றிய இந்தியா!!

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாற்றப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
இரண்டு வாரத்திற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. முதற்கட்டமாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது தலைநகருக்கு கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு, இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் தூதரகத்தை உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு மாற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவின் தாக்குதல் படிப்படியாக வளர்ந்து தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் நடந்து வருகிறது. இரண்டு வார காலமாக நடந்த சண்டையில் சுமார் 1500 பொதுமக்கள் தங்கள் தரப்பில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
newstm.in

