Theme Check

ஆசிய கோப்பை ஹாக்கியில் மோதிய இந்தியா - பாகிஸ்தான்.. சாதித்த தமிழக வீரர் !

ஆசிய கோப்பை ஹாக்கியில் மோதிய இந்தியா - பாகிஸ்தான்.. சாதித்த தமிழக வீரர் !

ஆசிய கோப்பை ஹாக்கியில் மோதிய இந்தியா - பாகிஸ்தான்.. சாதித்த தமிழக வீரர் !
X

11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்கியது. வருகிற 1ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா, 'பி' பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

hockey

இந்த நிலையில் முதல் நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் தொடக்க ஆட்டத்தில் 3 இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

hockey

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச கோலை அடித்து அசத்தினார். மேலும் பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல் ரானா ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து புள்ளியை சமன் செய்தார். இதையடுத்து ஆட்டநேர முடிவில் இரு அணிகளாலும் அடுத்த கோல் அடிக்கமுடியவில்லை.

இறுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி 1:1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.

newstm.in

Tags:
Next Story
Share it