Theme Check

டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை!!

டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை!!

டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை!!
X

கடந்த இரண்டு நாட்களாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெயில் அடிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக 44 டிகிரி செல்சியஸ் முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்நிலையில், கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி கூறுகையில், வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

heat-wave

வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றும் இதுகுறித்து கண்காணித்து வருவதாகவும், டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் எனவும் அதனால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

Next Story
Share it