Theme Check

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி.. தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை..!

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி.. தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை..!

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி.. தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை..!
X

பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொள்ள இந்தியாவைச் சேர்ந்த 65 வீரர் மற்றும் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

இதில், பேட்மிண்டன் இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனையான ஸ்ரேயா சிங்லா, ஜப்பானிய வீராங்கனையை எதிர்த்து விளையாடி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பஞ்சாப்பின் பதிண்டா நகரைச் சேர்ந்த அவர், மாநிலத்தில் இருந்து சென்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை ஆவார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து அவரது தந்தை தேவேந்தர் கூறும்போது, “இது அனைத்திற்கும் ஷ்ரேயாவின் கடின உழைப்பே காரணம். 4 வயது இருக்கும்போது ஷ்ரேயாவுக்கு காது கேட்காது. அவளால் பேசவும் முடியாது என எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால், காலம் கடந்திருந்தது.

இதன்பின்பு, காது கேட்பதற்கான உபகரணம் வாங்கி அவளது காதுகளில் வைத்த பின்னரே ஸ்ரேயா பேச கற்றுக் கொண்டாள். பதக்கம் வென்றது பஞ்சாப் மற்றும் இந்தியாவுக்கே மகிழ்ச்சி அளிக்கும் மிக பெரிய விஷயம்” எனத் தெரிவித்தார்.

போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரேயா அளித்த பேட்டியில், “எனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் எனக்கு ஊக்கமளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தனிநபர் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது. வரவுள்ள ஆசிய போட்டிகளிலும் கூட பதக்கம் வெல்வேன்.

மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தங்களுடைய பலவீனங்களை ஒதுக்கி வைத்து விட்டு விளையாட்டு, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags:
Next Story
Share it