Theme Check

மேலும் ஒரு வீரர் விலகல்… சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

மேலும் ஒரு வீரர் விலகல்… சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

மேலும் ஒரு வீரர் விலகல்… சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!
X

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேலும் ஒரு இந்திய வீரர் விலகியுள்ளார்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் துவங்கி நடைபெறவுள்ளது. போட்டிகள் 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ind wi

இந்நிலையில், இத்தொடருக்கான அணியிலிருந்து கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

இவர்களுக்கான மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் இருப்பார்கள் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

sundar

காயத்திற்கு சிகிச்சைபெற நாளை கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லவுள்ளார். இங்கு மூன்று வாரங்கள் தங்கி சிகிச்சை பெறவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it