இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகத் தவிப்பு... ரஷ்ய அதிபர் பரபரப்பு புகார் !!

இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகத் தவிப்பு... ரஷ்ய அதிபர் பரபரப்பு புகார் !!

இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகத் தவிப்பு... ரஷ்ய அதிபர் பரபரப்பு புகார் !!
X

உக்ரைனில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஒருவாரமாக நீடித்து வருகிறது. தாக்குதலின் ஆரம்ப நாட்களில் பெரியளவில் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது.

russia attack

உக்ரைனில் உள்ள காவல்துறை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலக கட்டிடங்கள், ராணுவ மையங்களை ரஷ்யா அழித்துவருகிறது. ஏவுகணைகள், குண்டுகளை மழைபோல் பொழிந்து வருகிறது ரஷ்யா. இந்த தாக்குதலில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு மாணவர்கள் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து உக்ரைன் நகரங்களில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது. உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு வரும்படி அனைவருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு செல்வதற்காக ரயில் ஏறச் சென்ற இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் உள்ள இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவனத்தினர் தாக்குவதாகவும், அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியும் வருகின்றன.

ukraine indian studen

இதனிடையே இந்தியாவைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வெளி நாட்டினர் வெளியேறுவதை உக்ரைன் தாமதப்படுத்த முயற்சிக்கிறது, இதன் காரணமாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it