Theme Check

இந்தியாவின் பந்த் சோதனையும்.. பிரசித் சாதனையும்- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ODI தொடரை வென்று அபாரம் !!

இந்தியாவின் பந்த் சோதனையும்.. பிரசித் சாதனையும்- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ODI தொடரை வென்று அபாரம் !!

இந்தியாவின் பந்த் சோதனையும்.. பிரசித் சாதனையும்- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ODI தொடரை வென்று அபாரம் !!
X

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கைரன் பொலார்ட் களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் நிகோலஸ் பூரன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற பூரன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கிஷன் நீக்கப்பட்டதால், தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆச்சரியமளிக்கும் வகையில் ரிஷப் பந்த் களமிறங்கினார். ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கெமார் ரோச் வேகத்தில் வீழ்ந்தார். இதன்பிறகு, ரன் குவிக்க பந்த் மற்றும் விராட் கோலி சிரமப்பட்டனர்.

rahul out

பொலார்டுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்ட ஒடீன் ஸ்மித், தனது இரண்டாவது ஓவரிலேயே ரிஷப் பந்த் மற்றும் விராட் கோலியை தலா 18 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அதிரடி காட்டினார். 43 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய அணியை ராகுல் மற்றும் சூர்யகுமார் இணை சரிவிலிருந்து மீட்டது. பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 49 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

rahul out

இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாலர்கள் அசத்தலாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. குறிப்பாக பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அனல் பறந்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

rahul out

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட் எடுத்தனர். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி 11ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it