Theme Check

மறைமுக தேர்தலில் மோதல்.. திமுக கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு..!

மறைமுக தேர்தலில் மோதல்.. திமுக கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு..!

மறைமுக தேர்தலில் மோதல்.. திமுக கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு..!
X

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது அதிமுக - திமுகவினர் இடையே நடைபெற்ற மோதலில் திமுக கவுன்சிலரின் கணவர் மண்டை உடைந்தது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இறுதியில், வாக்குப்பெட்டி தூக்கி வீசி உடைக்கப்பட்டது.

இந்த சூழலில், வெள்ளலூர் பேரூராட்சிக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்போது அதிமுக - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த மோதலில் ஈடுபட்டவர்களை விரட்ட போலீசார் நடத்திய தடியடியின்போது, மதுக்கரை 4-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரின் மண்டை உடைந்தது.

வெள்ளலூரில் மொத்தமுள்ள 15 வார்டில் திமுக - 6, அதிமுக - 8, சுயேட்சை - 1 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், இன்று வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it