Theme Check

இங்குட்டு 200, அங்குட்டு 200.. மொத்தம் 400 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு..!

இங்குட்டு 200, அங்குட்டு 200.. மொத்தம் 400 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு..!

இங்குட்டு 200, அங்குட்டு 200.. மொத்தம் 400 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு..!
X

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக, 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களைக் கொண்டு வீசியும், கட்டைகளாலும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த மோதலின் போது 58 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it