ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது இன்டெல் நிறுவனம் !!

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது இன்டெல் நிறுவனம் !!

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது இன்டெல் நிறுவனம் !!
X

உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.

Amazon1

இதனால் ரஷ்யாவில் இந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாத நிலை ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் சேவையை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் அனைத்துப் புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என இன்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. நாங்கள் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிப்பதிலும், அமைதிக்கு விரைவாக திரும்ப அழைப்பு விடுப்பதிலும் இன்டெல் தொடர்ந்து உலகளாவிய சமூகத்துடன் இணைந்து வருகிறது, என தெரிவித்துள்ளது.

intel

இதோடுமட்டுமல்லாமல், அமேசான் வர்த்தக நிறுவனம், நெட்பிளிக்ஸ், சாம்சங், ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், டிக்டாக், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it