Theme Check

தீவிரமடைந்து வரும் போராட்டம்.. பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய..!

தீவிரமடைந்து வரும் போராட்டம்.. பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய..!

தீவிரமடைந்து வரும் போராட்டம்.. பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய..!
X

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே நேற்று ராஜினாமா செய்தார். மேலும், 2 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று கூறினார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்பே அறிவித்தது போன்று அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் தெரிவித்துள்ளார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.

அதன்படி, கோத்தபய ராஜபக்சே வருகிற 13-ம் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவது பற்றி பிரதமர் ஊடக பிரிவு கூறும்போது, சர்வ கட்சி அரசு அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற பின்பு விக்ரமசிங்கே பதவி விலகுவார் என தெரிவித்தது. அதுவரை விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
Next Story
Share it