Theme Check

30 ஆண்டுகால போராட்டத்துக்கு இடைக்கால நிவாரணம்.. பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார் !!

30 ஆண்டுகால போராட்டத்துக்கு இடைக்கால நிவாரணம்.. பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார் !!

30 ஆண்டுகால போராட்டத்துக்கு இடைக்கால நிவாரணம்.. பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார் !!
X

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரை விடுதலை செய்ய அரசு முனைப்பு காட்டிவருகிறது. அல்லது ஜாமின் பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
perarivalan
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார்.

மகனுக்கு ஜாமின் கிடைத்தது குறித்து பெரும் நெகிழ்ச்சியுடன் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பிணை ஒரு இடைக்கால நிவாரணம். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், என தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it